இந்தியா- ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி: மழையால் ஆட்டம் பாதிப்பு
- சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் அடித்து அசத்தினார்.
- இந்திய அணி தரப்பில் முகமது சமி 2, அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியின் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன் படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஸ் களமிறங்கினர். மிட்செல் மார்ஸ் முதல் ஓவரீலேயே முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டேவிட் வார்னருடன் ஸ்டீவ் சுமித் ஜோடி சேர்ந்து ஆடினர்.
சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் அடித்து அசத்தினார். இவர் 52 ரன்களில் அவுட் ஆனர். இந்த ஜோடி 2 விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தது. இவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே ஸ்மித் (41) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லெபுசென் 39 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
157 ரன்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கிரீன் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். 35.4 ஓவரில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் முகமது சமி 2, அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.