கிரிக்கெட் (Cricket)

இந்தியா- இங்கிலாந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்: இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது

Published On 2023-10-29 13:34 IST   |   Update On 2023-10-29 21:28:00 IST
2023-10-29 08:36 GMT

முதல் ஓவரில் இந்தியா ரன் ஏதும் எடுக்கவில்லை.

2023-10-29 08:31 GMT

இந்திய அணி வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். முன்னாள் வீரர் பிஷன் சிங் பெடி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அணிந்து விளையாடுகிறார்கள்.

2023-10-29 08:24 GMT

ரோகித் சர்மா கேப்டனாக களம் இறங்கும் 100 வது போட்டி இதுவாகும். பிசிசிஐ அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

2023-10-29 08:18 GMT

"நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். இதற்கு குறிப்பிடத் தகுந்தவாறு காரணம் ஏதும் இல்லை. இது ஒரு தைரியமான முடிவு. இது ஒரு சிறந்த தொடர். இன்று நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவோம் என நம்புகிறேன்" என பட்லர் தெரிவித்தார்.

2023-10-29 08:16 GMT

"நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். 2-வது பேட்டிங் செய்ய எங்களுக்கு போதுமான நேரம் கிடைத்தது. ஆடுகளம் சிறப்பாக இருப்பதுபோல் தெரிகிறது. ஆடுகளத்தின் மேற்பகுதி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் உலகக் கோப்பையில் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளோம். ஓய்வு கிடைத்ததும் சிறந்தது" என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

2023-10-29 08:12 GMT

இங்கிலாந்து அணி:-

1. பேர்ஸ்டோவ், 2. தாவித் மலான், 3. ஜோ ரூட், 4. பென் ஸ்டோக்ஸ், 5. ஜாஸ் பட்லர், 6. லிவிங்ஸ்டோன், 7. மொயீன் அலி, 8. கிறிஸ் வோக்ஸ், 9. டேவிட் வில்லே, 10. அடில் ரஷித், 11. மார்க் வுட்.

2023-10-29 08:10 GMT

உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை ஐந்து போட்டிகளில் சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. முதன்முறையாக முதலில் பேட்டிங் செய்து இலக்கு நிர்ணயிக்க இருக்கிறது.

2023-10-29 08:09 GMT

இந்திய அணி:-

1. ரோகித் சர்மா, 2. சுப்மன் கில், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. கே.எல். ராகுல், 6. சூர்யகுமார் யாதவ், 7. ஜடேஜா, 8. குல்தீப் யாதவ், 9. முகமது ஷமி, 10. பும்ரா, 11. முகமது சிராஜ்.

2023-10-29 08:07 GMT

இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

Tags:    

Similar News