கிரிக்கெட்

இந்தியா-வங்களாதேசம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி

வங்காள தேசத்திற்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பேட்டிங்

Update: 2022-12-04 06:00 GMT
  • டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
  • ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பினர்.

மிர்புர்:

வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்கிறது.

நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி உள்ள இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இதனால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News