கிரிக்கெட்

ஆஸ்திரேலிய தொடர் இந்தியாவுக்கு தேவையற்றது- வாசிம் அக்ரம்

Published On 2023-09-18 07:45 GMT   |   Update On 2023-09-18 07:45 GMT
  • உலகக் கோப்பைக்கு முன்பு சோர்வு ஏற்படும்.
  • இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக இருக்காது.

புதுடெல்லி:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவது தேவையற்றது. ஏனென்றால் இது இந்திய வீரர்களுக்கு கூடுதல் சோர்வை ஏற்படுத்தி விடும். ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய தொடர் இடையே இந்திய வீரர்களுக்கு ஓய்வு எடுக்க சிறிது நேரமே இருக்கிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக இருக்காது.

உலகக்கோப்பையில் இந்திய அணி வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணம் செய்யவே ஒருநாள் ஆகிவிடும். இதனால் உலகக்கோப்பையில் ஆற்றலுடன் இருப்பது முக்கியம். இந்த நேரம் ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவது ஏன்? என தெரியவில்லை.

இவ்வாறு வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

Tags:    

Similar News