கிரிக்கெட்
null

கடைசி போட்டியில் கில் விளையாடாமல் இருப்பதே நல்லது- முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து

Update: 2023-02-01 11:47 GMT
  • சுப்மான் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார்.
  • இதுவரை ஐந்து டி20 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அசத்தி வரும் சுப்மன் கில், டி20 போட்டிகளில் சுமாராகவே விளையாடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான கடந்த இரண்டு டி20 போட்டிகளில் கில் 7 மற்றும் 11 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக பிரித்வி ஷா-வை களமிறக்க வேண்டும் என விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கலாம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

சுப்மான் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் டி20 போட்டிகளில் அவர் இதுவரை அதை செய்யவில்லை. அவர் இன்னும் ஒரு போட்டியில் விளையாடி சொதப்பினாலும் கூட நம்பிக்கையை இழந்துவிடுவார்.

மற்ற 2 வடிவங்களில் சிறப்பாக விளையாடி வரும் ஃபார்மும் பாதிபடைந்துவிடும். இதுபோன்ற ஒரு வீரர் டி20 கிரிக்கெட்டில் ஆட வேண்டும் தான். ஆனால் அவருக்கு கடைசி போட்டியில் ஓய்வு கொடுத்து வைத்தால் மட்டுமே புத்துணர்ச்சியுடன் இருப்பார். அடுத்த போட்டிகளிலாவது பழைய ஃபார்முடன் இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுவரை ஐந்து டி20 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News