கிரிக்கெட்

டெஸ்ட் தரவரிசை: இந்தியாவின் நம்பர் ஒன் இடத்துக்கு ஆபத்து

Published On 2023-07-17 11:28 GMT   |   Update On 2023-07-17 11:28 GMT
  • வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தாலும் அவர்களின் இடம் உறுதியாக இல்லை.
  • ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்திய அணி 121 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது நாளில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஜூலை 20-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் தற்போது, ஐசிசி தரவரிசையின்படி, இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக உள்ளது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தாலும் அவர்களின் இடம் உறுதியாக இல்லை.

ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்திய அணி 121 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி, இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஆஷஸ் தொடரை குறைந்தபட்சம் 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றால் முதல் இடத்தை பிடிக்கும். மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் ஜூலை 19-ம் தேதி மான்செஸ்டரிலும், நான்காவது ஆஷஸ் ஜூலை 27-ம் தேதி ஓவல் மைதானத்திலும் தொடங்கும்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தால், ஆஷஸ் தொடரை குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தால், பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி முதல் இடத்தைப் பெற இரண்டு வழிகள் உள்ளன.

1. ஆஷஸ் தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்து தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றினால்.

2. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-2 என வென்றால் போதுமானது.

Tags:    

Similar News