கிரிக்கெட் (Cricket)

விஜய் ஹசாரே டிராபி: தமிழகத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அரியானா

Published On 2023-12-13 21:28 IST   |   Update On 2023-12-13 21:28:00 IST
  • முதலில் ஆடிய அரியானா அணி 50 ஓவரில் 293 ரன்கள் எடுத்தது.
  • தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ராஜ்கோட்:

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

இந்நிலையில், இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற அரியானா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய அரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியின் ஹிமான்ஷு ராணா சதமடித்து அசத்தினார்.

தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடாமல் அவுட்டாகினர்.

பாபா இந்திரஜித் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார். தினேஷ கார்த்திக் 31 ரன்னும், ஜெகதீசன் 30 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், தமிழக அணி ரன்களுக்கு 230 ஆல் அவுட்டானது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அரியானா சார்பில் அன்ஷுல் கம்போஜ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

நாளை நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் மோத உள்ளன.

Tags:    

Similar News