கிரிக்கெட்

48 வருட உலகக் கோப்பை வரலாற்றில்...! பும்ரா நிகழ்த்திய சாதனை

Published On 2023-11-03 03:22 GMT   |   Update On 2023-11-03 03:22 GMT
  • இந்தியா 357 ரன்கள் குவித்தது
  • இலங்கை 55 ரன்களில் சுருண்டது

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 55 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.

358 ரன் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. முகமது சமி 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பும்ரா போட்டியின் முதல் பந்தை வீசினார். இந்த பந்தில் இலங்கை பேட்ஸ்மேன் நிசாங்காவை எல்.பி.டபிள்யூ மூலம் வீழ்த்தினார். நிசாங்கா ரிவ்யூ எடுத்தும் பயனில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பந்திலேயே பும்ரா விக்கெட்டை கைப்பற்றினார்.

இதன்மூலம் 48 வருட உலகக் கோப்பை வரலாற்றில், முதன்முறையாக ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். இதற்கு முன் எந்த பந்து வீச்சாளரும் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி (88), சுப்மன் கில் (92) ஆகியோர் சதத்தை தவறவிட்டனர்.

Tags:    

Similar News