கிரிக்கெட் (Cricket)
திண்டுக்கல் வெற்றி பெற 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருப்பூர்
- டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருப்பூர் அணி 173 ரன்கள் எடுத்தது.
சேலம்:
7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடைபெற்று வருகிறது. டி.என்.பி.எல். தொடரின் 20-வது லீக் ஆட்டம் இன்று இரவு நடக்கிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
டாஸ் போடப்பட்ட பிறகு சேலம் மைதானம் அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் போட்டி தாமதமாக தொடங்கியது.
அதன்படி முதலில் ஆடிய திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. சாய் கிசோர் 45 ரன்னும், துஷார் ரஹேஜா 30 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஆடிய விஜய சங்கர் 43 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.