கிரிக்கெட் (Cricket)

முதல் பந்து வீசும் முன்பே 9 ரன்கள் விட்டுக்கொடுத்த இலங்கை பவுலர்

Published On 2022-09-12 10:45 IST   |   Update On 2022-09-12 10:45:00 IST
  • ஒரு வைடு விக்கெட் கீப்பரிடம் சிக்காமல் பவுண்டரிக்கும் ஓடியது.
  • முதல் பந்தை சரியாக வீசுவதற்கு அவர் 6 பந்து எடுத்துக் கொண்டார்.

துபாய்:

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை துவம்சம் செய்து இலங்கை அணி 6-வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது.

இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் இலங்கையின் பந்து வீச்சில் தொடக்கம் வினோதமாக இருந்தது. முதல் பந்து வீசுவதற்கு முன்பே இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா 9 ரன் விட்டுக்கொடுத்தார்.

அதாவது முதல் பந்தை நோ-பாலாக வீச அடுத்த பந்து பிரீஹிட்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு வரிசையாக வைடாக வீசித் தள்ளினார்.

ஒரு வைடு விக்கெட் கீப்பரிடம் சிக்காமல் பவுண்டரிக்கும் ஓடியது. முதல் பந்தை சரியாக வீசுவதற்கு அவர் 6 பந்து எடுத்துக் கொண்டார். அதன் பிறகு கட்டுக்கோப்புடன் வீசிய அவர் முதல் ஓவரில் மொத்தம் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

Tags:    

Similar News