கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்டில் மேலும் ஒரு ஆப்கானிஸ்தான் வீரர்: டெல்லி அணி ஒப்பந்தம்

Published On 2024-04-26 11:43 GMT   |   Update On 2024-04-26 11:43 GMT
  • மிட்செல் மார்ஷ் மூன்று போட்டிகளில் விளையாடி 61 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
  • கடந்த முறையில் இதுபோன்று தொடரின் பாதிலேயே வெளியேறினார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம் பெற்றிருந்தார். காயம் காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார். சுமார் 10 நாட்கள் கழித்து காயம் காரணமாக மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மிட்செல் மார்ஷ்க்குப் பதிலாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குல்பதீன் நயிப்பை டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அவருடைய அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்காரணமாக முதன்முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் களம் காண்கிறார் குல்பதீன் நயிப்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ரஷித் கான், நூர் முகமது, ஓமர்ஜாய், நவீன் உல் ஹக் உள்ளிட்ட பல வீரர்கள் விளையாடி வருகின்றனர். தற்போது அவர்கள் வரிசையில் குல்பதீன் நயிப்பும் இணைந்துள்ளார்.

இந்த சீசனில் மிட்செல் மார்ஷ் மூன்று போட்டிகளில் விளையாடி 61 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒரு விக்கெட் மட்டும் எடுத்துள்ளார். கடந்த வருடமும் போட்டியில் மத்தியில் இருந்து விலகினார். தற்போது இந்த சீசனிலும் போட்டியின் மத்தியில் இருந்து விலகியுள்ளார். டெல்லி அணி இவரை 6.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News