கிரிக்கெட் (Cricket)
null

ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள்: 2-வது இடம் பிடித்த டேவிட் வார்னர்

Published On 2023-12-26 17:47 IST   |   Update On 2023-12-26 17:56:00 IST
  • ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
  • தொடக்க வீரரான வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார்.

மெல்போர்ன்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஜமால், சல்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்த போட்டியில் தொடக்க வீரரான வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஸ்டீவ் வாக்கை (18496) பின்னுக்கு தள்ளி டேவிட் வார்னர் (18515) 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார். அவர் 27368 ரன்கள் எடுத்து யாரும் தொட முடியாத இடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News