கிரிக்கெட் (Cricket)
null

டோனி கடைசி கட்டத்தில் களம் இறங்குவது ஏன் தெரியுமா?- விவரிக்கும் பிளமிங்

Published On 2024-05-10 09:23 GMT   |   Update On 2024-05-10 10:23 GMT
  • டோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது.
  • அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி, கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிம் ஒப்படைத்து, அவரை வழிநடத்தி வருவதுடன் பேட்டிங்கில் இறுதிக் கட்டத்தில் களம் இறங்கி விளையாடி வருகிறார்.

கடைசி ஓவர் அல்லது அதற்கு முந்தைய ஓவரில் களம் இறங்குகிறார். அவர் களம் இறங்கினால் சிக்ஸ் நிச்சயம் என்ற அளவிற்கு சந்திக்கும் பந்துகளை பவுண்டரி லைனுக்கு வெளியே பறக்க விடுகிறார். இதனால் அவர் முன்னதாக ஏன் களம் இறக்கப்படுவதில்லை? என்ற விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. அவர் முன்னதாக களம் இறங்கினால் உடனே அவுட்டாகிவிடுவார் என்ற எதிர் விமர்சனமும் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் எம்.எஸ். டோனி ஏன் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய வருகிறார் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பிளமிங்க் கூறியதாவது:-

டோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது. அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம். அதனால்தான், போட்டியில் 2-4 ஓவர்கள் பேட்டிங் மற்றும் முழுவதுமாக கீப்பிங் செய்து புதிய கேப்டனுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார். அதைத் தொடர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

டோனிக்கு மாற்றாக வேறொரு கீப்பர் அணியில் உள்ளார். ஆனால் அவர் டோனி ஆகிவிட முடியாது. 9-வது இடத்தில் டோனி களமிறங்குகிறார் என்பதாலேயே அவரால் போட்டியில் தாக்கம் ஏற்படுத்த முடியாது என நினைத்து விடாதீர்கள்.

இவ்வாறு பிளமிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News