கிரிக்கெட்
null

புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் ஜூனியர் அணி: பிரதமர் மோடி- கிரிக்கெட் பிரபலங்கள் பாராட்டு

Published On 2023-01-30 07:42 GMT   |   Update On 2023-01-30 07:47 GMT
  • பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு எந்த வடிவிலான உலக கோப்பையையும் இந்தியா வென்றது இல்லை.
  • சீனியர் அணி 3 முறை இறுதி போட்டியில் தோற்று உள்ளது.

போட்செப்ஸ்டரூம்:

பெண்களுக்கான முதலாவது 19 வயதுக்குட்பட்ட ஜூனியர் உலககோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது.

நேற்று நடந்த இறுதி போட்டியில் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி உலக கோப்பையை வென்றது.

முதலில் ஆடிய இங்கிலாந்து 17.2 ஓவர்களில் 68 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய இந்தியா 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 69 ரன் எடுத்தது.

பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு எந்த வடிவிலான உலக கோப்பையையும் இந்தியா வென்றது இல்லை. சீனியர் அணி 3 முறை இறுதி போட்டியில் தோற்று உள்ளது. தற்போது ஜூனியர் மகளிர் கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்து உள்ளது.

உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசு தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது.

உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் மகளிர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமாய் இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் "இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றதற்கு வாழ்த்துக்கள். அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினார்கள். வரும் காலங்களில் இந்த வெற்றி உத்வேகம் அளிக்கும். எதிர்கால முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மந்திரி கிரண் ரிஜிஜி, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா, முன்னாள் வீரர்கள் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் மற்றும் தினேஷ் கார்த்திக், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ், ராஜ்வர்தன்சிங் ரத்தோர் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News