கிரிக்கெட்

பதும் நிசங்கா இரட்டை சதம்: ஆப்கானிஸ்தான் வெற்றிபெற 382 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை

Published On 2024-02-09 12:53 GMT   |   Update On 2024-02-09 12:53 GMT
  • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை 381 ரன்களைக் குவித்தது.

பல்லேகலே:

ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அதிரடியாக ஆடினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தது.

அவிஷ்கா 88 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 16 ரன்னில் வெளியேறினார்.

3வது விக்கெட்டுக்கு நிசங்கா, சமரவிக்ரமா ஜோடி 120 ரன்களை சேர்த்தது. சமர விக்ரமா 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய நிசங்கா இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 211 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்து, 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News