கிரிக்கெட் (Cricket)
ரோகித் சர்மா
3வது ஒருநாள் போட்டி - காயம் காரணமாக ரோகித் சர்மா உள்பட 3 வீரர்கள் விலகல்
- 2-வது ஒருநாள் போட்டியில் 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது வங்காளதேச அணி.
- அத்துடன், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
மிர்புர்:
இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என தொடரை வென்றது.
இந்நிலையில் , வங்காளதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.