சினிமா
கோப்புப் படம்

பலத்த பாதுகாப்புடன் நடிகர் சங்க பொதுக்குழு நாளை கூடுகிறது - ரஜினி, கமலுக்கு அழைப்பு

Published On 2018-08-18 13:35 IST   |   Update On 2018-08-18 13:35:00 IST
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் நாளை கூடுகிறது. இதில் கலந்துகொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #NadigarSangamMeet
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை (19-ந் தேதி) கலைவாணர் அரங்கில் மதியம் 2 மணிக்கு நடக்கிறது. சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன.

பொதுச்செயலாளர் விஷால் வரவேற்கிறார். துணைத்தலைவர் கருணாஸ், வரவுசெலவு கணக்குகளை வாசித்து ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பார். நடிகர் சங்கத்துக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதால் தேர்தல் தள்ளிவைக்கப்படும் என தெரிகிறது. ஆனால் அதிருப்தியாளர்கள் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.

இதனால் பரபரப்பு நிலவுகிறது. விஷால் அணியே மீண்டும் களம் இறங்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக களம் இறங்க டி.ராஜேந்தர், ராதாரவி, ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்டோர் தயாராகி வருகிறார்கள்.


கோப்புப் படம்

பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் ரஜினி, கமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கலந்து கொள்வார்களா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. நடிகர் சங்கத்தில் 3 ஆயிரம் பேர் உறுப்பினராக உள்ளனர். அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கப்பட்டு இருக்கின்றனர். நாளை நடைபெறும் பொதுக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி நடிகர் சங்கம் சார்பில் போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

பொதுக்குழு நடைபெறுவதால் நாளை சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. #NadigarSangamMeet #Vishal

Tags:    

Similar News