OTT

சமந்தா தயாரித்த சுபம் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

Published On 2025-06-01 13:15 IST   |   Update On 2025-06-01 13:15:00 IST
  • நடிகை சமந்தா டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்தார்.
  • திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

நடிகை சமந்தா டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்தார். திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

ஒரு நண்பர் கூட்டம் திருமணம் செய்துக் கொள்கின்றனர். அவர்களது மனைவி அனைவரும் குறிப்பிட்ட சீரியலை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு அவர்களின் கட்டுபாட்டை இழந்து பேய் பிடித்தது போல் நடந்துக் கொள்கின்றனர். கணவர்கள இதனால் பயந்து இருக்கின்றனர். ஒட்டு மொத்த ஊரில் உள்ள பெண்களுமே இப்படி நடந்து கொள்கிறார்கள். இதற்கு அடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் கதைக்களமாகும்.

இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

படத்தின் கதையை வசந்த் மரிகாண்டி எழுத பிரவீன் இயக்கியுள்ளார். இவர்கள் இதற்கு முன் சினிமா பண்டி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஹர்ஷித், ஷிரியா, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ராவனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News