உன் பார்வையில் முதல் மிஸஸ் தேஷ்பாண்டே வரை... இந்த வார ஓடிடியில் வெளியாகும் படங்கள்...
- திரையரங்குகளில் வெளியாகி 11 மாதங்களுக்கு பிறகு தற்போது ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
- ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
உன் பார்வையில் (Un Paarvayil)
மலையாள நடிகை பார்வதி நாயர் நடித்துள்ள படம் 'உன் பார்வையில்'. இப்படம் நேரடியாக வருகிற வெள்ளிக்கிழமை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமான உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்துள்ளார். கணவர், இரட்டை சகோதரியின் மர்ம மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது தேடல், ரகசியங்களும் திருப்பங்களும் நிறைந்த த்ரில்லர் நிறைந்த படமாக ரசிகர்களுக்கு அமைய உள்ளது.
பிரேமண்டே (Premante)
நடிகை ஆனந்தி நடித்தள்ள படம் 'பிரேமண்டே'. நவநீத ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் இந்த படத்தில் தெலுங்கு ஹீரோ பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஜான்வி நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்த இந்த காதல் - நகைச்சுவை படம் கடந்த மாதம் 21-ந்தேதி வெளியானது. திரையரங்குகளில் கலையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் (Dominic And The Ladies Purse)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் '. மம்முட்டி , கோகுல் சுரேஷ், சுஷ்மிதா பட், விஜி வெங்கடேஷ், சித்திக், வினீத், விஜய் பாபு, மீனாட்சி உன்னிகிருஷ்ணன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 11 மாதங்களுக்கு பிறகு தற்போது ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. அதன்படி இப்படத்தை ஜீ5 தளத்தில் வருகிற 19-ந்தேதி முதல் கண்டு களிக்கலாம்.
ஃபார்மா (Pharma)
பி.ஆர். அருண் இயக்கத்தில் நிவின் பாலி , ரஜித் கபூர், நரேன், வீணா நந்தகுமார், ஸ்ருதி ராமச்சந்திரன், முத்துமணி, அலேக் கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியாக உள்ள சிரீஸ் 'பார்மா'. ஒரு மருத்துவ விற்பனைப் பிரதிநிதி, தான் விற்கும் மருந்து நோயாளிகளுக்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்து, கார்ப்பரேட் சக்திகளுக்கு எதிராகப் போராடும் கதை. இதனை வருகிற வெள்ளிக்கிழமை ஜியோஹாட் ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு ரசிக்கலாம்.
மிஸஸ் தேஷ்பாண்டே (Mrs Deshpande)
ஒரு தாய்- மகனுக்கு இடையேயான உறவை சொல்லும் 'மிஸஸ் தேஷ்பாண்டே' வருகிற வெள்ளிக்கிழமை முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஜியோஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.