இந்த வார ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து ஓர் பார்வை...
- ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அரங்கேறும் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.
- நாளை முதல் தமிழ் ,ஆங்கிலம், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
பேட் கேர்ள்
வர்ஷா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் இணைந்து தயாரித்த படம் 'பேட் கேர்ள்'. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அரங்கேறும் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் மாதம் வெளியான நிலையில், ஜியோ ஹாட்ஸ்டாரில் இன்று முதல் காணலாம்.
கிஸ்
கவின், ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் வெளியான படம் 'கிஸ்'. சதீஷ் இயக்கதில் ரொமான்டிக் மற்றும் காமெடி கலந்து உருவான இப்படம் செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் ஜீ5 தளத்தில் வருகிற 7-ந்தேதி வெளியாக உள்ளது.
தி பென்டாஸ்டிக் ஃபோர்
மார்வெல் ஸ்டுடியோஸுக்கு 2025 ஒரு பெரிய ஆண்டாக அமைந்துள்ளது. கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட், தண்டர்போல்ட்ஸ் மற்றும் தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வந்தன. முதல் இரண்டும் பார்வையாளர்களை பிடிக்கத் தவறிய போதிலும், பென்டாஸ்டிக் போர் பாக்ஸ் ஆபீஸிலும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. உலகளவில் அரை பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்த தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் இப்போது ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த படம் நாளை முதல் தமிழ் ,ஆங்கிலம், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
பாரமுல்லா
காஷ்மீரை மையமாகக் கொண்ட மர்ம த்ரில்லர் படம் 'பாரமுல்லா'. டிஎஸ்பி ரிட்வான் சயீது காணாமல் போன குழந்தைகளை தேடும் சுவாரஸ்யமான கதைக்களத்தில் உருவான இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வருகிற 7-ந்தேதி முதல் காணலாம்.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.