This Week OTT Release... ரேகை முதல் ஆர்யன், ஆண் பாவம் பொல்லாதது வரை... ஓர் பார்வை
- இப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.
- வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
ஜிங்கிள் பெல் ஹெய்ஸ்ட்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க கிறிஸ்துமஸ் காதல் நகைச்சுவைத் திரைப்படமான ஜிங்கிள் பெல் ஹெய்ஸ்ட் இன்று முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் காணலாம். கிறிஸ்துமஸ் ஈவ் அன்று லண்டன் பல்பொருள் அங்காடியைக் கொள்ளையடிக்கத் திட்டமிடும் திருடர்கள் குறித்து தொடங்கும் கதையில் காதல், நகைச்சுவை கலந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது. இப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.
ரேகை
ராஜேஷ் குமாரின் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'இருண்ட, அமைதியற்ற த்ரில்லர்' திரைப்படம் ரேகை. இந்தத் தொடரை தினகரன் எம் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். நடிகர்கள் பாலா ஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை நாளை மறுநாள் முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
ஆர்யன்
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கி இருந்தார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு சாம். சி. எஸ். இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்து இருந்தது. 'ஆர்யன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த மாதம் 31-ந்தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறாத நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து 'ஆர்யன்' படம் நாளை மறுநாள் முதல் ஓ.டி.டி. தளமான நெட்பிளிக்ஸில் காணலாம்.
ஆண் பாவம் பொல்லாதது
ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடித்த நகைச்சுவை காதல் படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். மனைவியின் முற்போக்கான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள கணவன் போராடுவதால், திருமண வாழ்வில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் தம்பதியினரைச் சுற்றி இந்தப் படம் சுழல்கிறது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு நாளை மறுநாள் முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.