புத்தாண்டு ஸ்பெஷல்: இந்த வாரம் உங்கள் ஃபேவரைட் தளங்களில் என்னென்ன ரிலீஸ்?
- ஸ்டிரேஞ்சர் திங்ஸ் நான்கு மொழிகளில் வெளியானது
- விக்ராந்தின் லவ் பியாண்ட் விக்கெட் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியது
புது ஆண்டை குதூகலிக்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் எண்ணற்ற படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை வெளியிடுகிறது ஓடிடி தளங்கள். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி மற்றும் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
மௌக்லி
நடிகர் ரோஷன் கனகாலா, இயக்குனர் சந்தீப் ராஜ் ஆகியோர் இணைந்த இரண்டாவது படம் 'மௌக்லி'. இப்படம் டிச.13 அன்று 'அகண்டா 2' திரைப்படத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இன்று ETV Win ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
லவ் பியாண்ட் விக்கெட்
விக்ராந்த் நடித்திருக்கும் ஒரு தமிழ் வெப் சீரிஸ் லவ் பியாண்ட் விக்கெட். கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த வெப் சிரீஸ் இன்றுமுதல் ஜியோஹாட்ஸ்டார் ப்ரீமியர் தளத்தில் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் நான்கு எபிசோட்கள் வெளியாகும்.
ஸ்டிரேஞ்சர் திங்ஸ்
ஸ்டிரேஞ்சர் திங்ஸ் (Stranger Things) சீசன் 5, மூன்று பாகங்களாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் நெட்ஃபிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹக்
யாமி கௌதம் தார் மற்றும் இம்ரான் ஹாஷ்மி நடித்த படம் ஹக். கடந்த நவம்பர் மாதம் வெளியான இப்படம் பாக் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதன் கருப்பொருள் மற்றும் நடிப்பிற்காக பாராட்டப்பட்டது. இந்நிலையில் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இப்படம் வெளியாகிறது.
கும்கி2
கும்கி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எடுக்கப்பட்ட படம் அதன் தொடர்ச்சியான கும்கி 2. இதனையும் பிரபு சாலமன்தான் இயக்கினார். இப்படம் நவம்பர் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றநிலையில் ஜன.3 அன்று ப்ரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.