This Week OTT Release... காந்தா முதல் சிங்கிள் பாபா வரை... ஓர் பார்வை
- திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
- சஸ்பென்ஸ் நிறைந்த படம் வருகிற 12-ந்தேதி ஜீ5 இல் வெளியாக உள்ளது.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
ரியல் காஷ்மீர் கால்பந்து கிளப்' (RealKashmirFootballClub)
மகேஷ் மத்தாய், ராஜேஷ் மாபுஸ்கர் இயக்கத்தில் முகமது ஜீஷன் அய்யூப், மானவ் கவுல், அபிஷாந்த் ராணா, முஅஸ்ஸாம் பட், அஃப்னான் ஃபாஸ்லி, அமந்தீப் தாக்கூர், குஷால் மாகோ, ஷஹீம் பட், சவுத் அல் ரஷித் பாரா, அன்மோல் தில்லான் தகேரியா நடித்துள்ள சீரிஸ் 'ரியல் காஷ்மீர் கால்பந்து கிளப்'. இந்த சீரிஸ் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, மராத்தி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. இதனை SonyLiv ஓடிடி தளத்தில் தற்போது காணலாம்.
சூப்பர்மேன் (Superman)
ஜேம்ஸ் கன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் கிளார்க் கென்டாக டேவிட் கோரன்ஸ்வெட், லோயிஸ் லேனாக ரேச்சல் ப்ரோஸ்னஹான், லெக்ஸ் லூதராக நிக்கோலஸ் ஹோல்ட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற 11-ந்தேதி முதல் ஓடிடி தளமான தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
காந்தா (Kaantha)
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில்வெளியான படம் 'காந்தா'. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பீரியட் கால கதையாக உருவான இந்தத் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருந்தாலும், இப்படத்தில் துல்கர் மற்றும் சமுத்திரகனியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்த நிலையில், இப்படம் வருகிற 12-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சிங்கிள் பாபா (SinglePapa )
குணால் கெம்மு , மனோஜ் பஹ்வா, ஆயிஷா ராசா மற்றும் பிரஜக்தா கோலி ஆகியோர் நடித்துள்ள 'சிங்கிள் பாபா' வருகிற 12-ந்தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
சாலி மொஹப்பத் (SaaliMohabbat)
ராதிகா ஆப்தே, திவ்யேந்து சர்மா, அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'சாலி மொஹப்பத்'. டிஸ்கா சோப்ரா இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் நிறைந்த படம் வருகிற 12-ந்தேதி ஜீ5 இல் வெளியாக உள்ளது.
தி கிரேட் ஷம்சுதின் பேமிலி (TheGreatShamsuddinFamily)
கிருத்திகா கம்ரா, ஸ்ரேயா தன்வந்தரி, ஃபரிதா ஜலால், ஷீபா சாதா, டோலி அலுவாலியா மற்றும் பலர் நடித்துள்ள 'தி கிரேட் ஷம்சுதீன் ஃபேமிலி' வருகிற 12-ந்தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம்.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.