சினிமா

பிரபல நடிகருக்கு வலைவீசும் நடிகை

Published On 2018-10-09 22:44 IST   |   Update On 2018-10-09 22:44:00 IST
சமீபத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை, ‘நம்பர்-1’ நடிகைக்கு...
சமீபத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை, ‘நம்பர்-1’ நடிகைக்கு இணையாக சம்பளம் கேட்பது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.

சண்டை போடும் கோழி நடிகருடன் அவர் நடித்த புதிய படம் திரைக்கு வரட்டும். அதுவரை பொறுத்திருக்கலாம். படம் திரைக்கு வந்ததும், சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விடலாம் என்று திட்டவட்டமாக முடிவெடுத்து இருக்கிறாராம்.

ஏறக்குறைய அவர் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து விட்டார். வீரமான நடிகருடன்தான் இன்னும் இணையவில்லையாம். அதனால் அந்த வாரிசு நடிகையின் கவனம், நடிகரின் பக்கம் திரும்பியிருக்கிறதாம்!
Tags:    

Similar News