சினிமா

அடம்பிடித்த நடிகை மீது புகார் அளித்த படக்குழு

Published On 2018-06-12 22:51 IST   |   Update On 2018-06-12 22:51:00 IST
மலையாளத்தில் காதலான படம் மூலம் பிரபலமான நடிகை, தமிழில் ஒல்லி நடிகருடன் ஒரு படத்தில் நடித்தாராம்.
மலையாளத்தில் காதலான படம் மூலம் பிரபலமான நடிகை, தமிழில் ஒல்லி நடிகருடன் ஒரு படத்தில் நடித்தாராம். ஆனால், எதிர்பார்த்தளவிற்கு தமிழில் வாய்ப்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்று தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறாராம்.

தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் கேரவன் கேட்டு படக்குழுவினரை தொல்லை செய்துள்ளாராம். அதிக வாடகை உள்ள கேரவன் தான் எனக்கு வேண்டும் என்றும் அதில் மற்றவர்கள் யாரும் வரக்கூடாது என்றும் நடிகை நிபந்தனை விதித்தாராம். இதனால் வேறு வழியின்றி இரண்டு கதவு கேரவனை படக்குழுவினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்களாம்.

மேலும் ஆடம்பர வசதிகள் இல்லை என்று தகராறு செய்ததாகவும், அமைதியாக இருக்கும்படி சமரசப்படுத்திய தனது ஊழியரை வேலையில் இருந்து நீக்கி விட்டதாகவும் கிசுகிசு கிளம்பி உள்ளதாம். இதனால் படக்குழுவினர் அவர்மீது புகார் கூறி இருக்கிறார்களாம்.
Tags:    

Similar News