சினிமா செய்திகள்

உங்களின் துணை எனக்கு பலம் கொடுத்துள்ளது - மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்

Published On 2025-06-02 13:34 IST   |   Update On 2025-06-02 13:34:00 IST
  • மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
  • திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். மணி ரத்னம் அவர் இயக்கும் படத்திற்கு என தனி ஸ்டைல் இருக்கும், இன்று மணிரத்னம் அவரது 69- வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் மணி ரத்னத்தை வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "நாயகன் முதல் தக் லைஃப் வரை குடும்பம், கனவு காண்பவர்கள் என்பதையும் தாண்டி சினிமாவின் மாணவர்களாக ஒன்றாக பயணித்துள்ளோம். உங்களின் துணை எனக்கு பலம் கொடுத்துள்ளது. உங்களின் கதைகள் தொடரட்டும். உங்களின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகையும், சினிமாவுக்கான அர்த்தத்தையும் கொடுக்கட்டும். என்றும் உங்களின் நண்பனாக பிறந்தநாள் வாழ்த்துகள் மணிரத்னம்!." என கூறியுள்ளார்.

Tags:    

Similar News