சினிமா செய்திகள்
null

தமிழ் சினிமாவில் முதன் முதலில் `சிக்ஸ் பேக்'வைத்தது தனுஷ் - சிவக்குமார் பேச்சுக்கு விஷால் பதிலடி

Published On 2025-04-24 18:45 IST   |   Update On 2025-04-24 18:46:00 IST
  • நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ.
  • ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. அதில் நடிகரான சிவக்குமார் நடிகர் சூர்யாவின் வலர்ச்சி மற்றும் தொடக்க காலத்தில் பணியாற்றிய படத்தை பற்றியும். பிறகு தமிழ் சினிமாவில் உடலை மெருகேற்றி 6 பேக் கொண்டு வந்த முதல் நடிகர் சூர்யாவை பற்றி மிகவும் பெருமையாக பேசினார்.

அதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் உண்மையில் சூர்யா தான் தமிழ் சினிமாவில் முதன்முறையாக 6 பேக் கொண்டு வந்தாரா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கு வகையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் நடிகர் விஷால் பதிலளித்துள்ளார். அதில் " 2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தான் முதன் முதலில் சிக்ஸ் பேக் கொண்டு வந்தார். அதை தொடர்ந்து மத கஜ ராஜா மற்றும் சத்யா திரைப்படத்தில் நான் 6 பேக் வைத்தேன். மக்கள் மறந்து விட்டார்கள் என நினைக்கிறேன்" என கூறினார்.

வாரணம் ஆயிரம் மற்றும் சத்யா திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News