சினிமா செய்திகள்

விக்ரம் பிரபுவின் சிறை வெளியாகும் தேதி அறிவிப்பு

Published On 2025-10-11 11:08 IST   |   Update On 2025-10-11 11:08:00 IST
  • நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை.
  • நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சிறை திரைப்படம் டிசம்பர் 25 முதல் உலகமெங்கும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News