விக்ரம் பிரபு நடித்துள்ள 'சிறை' படத்தின் டிரெய்லர் அப்டேட்
- சிறை படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார்.
- விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார்.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், சிறை' படத்தின் டிரெய்லர் வரும் 12ம் தேதி பிற்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிறை திரைப்படம் டிசம்பர் 25 முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது