சினிமா செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்- ரஜினிகாந்த்

Published On 2025-04-25 22:01 IST   |   Update On 2025-04-25 22:01:00 IST
  • காஷ்மீரின் அமைதியான சூழலை கெடுக்க எதிரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
  • கடும் நடவடிக்கைகயை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு கோவை மற்றும் அட்டபாடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வந்தது. இன்றுடன் அப்பகுதி படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து சென்னை திரும்பினார்.

அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

காஷ்மீரின் அமைதியான சூழலை கெடுக்க எதிரிகள் இதுபோன்ற செயல்பகளில் ஈடுபடுகின்றனர்.

பஹல்காம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு கனவில் கூட நினைக்காத கடும் தண்டனை வழங்க வேண்டும்.

காஷ்மீரில் அமைதி திரும்பியிருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை விரைந்து கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.

கடும் நடவடிக்கைகயை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவாக அதை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News