சினிமா செய்திகள்

'GOAT' படத்தின் புதிய அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்

Published On 2024-05-27 06:39 GMT   |   Update On 2024-05-27 06:39 GMT
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்தது.
  • பிரியமானவளே, புலி போன்ற படங்களில் தனது குரலில் பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது.


இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கொடுத்துள்ளார்.

விஜய் ஏற்கனவே தான் நடித்த சில படங்களில் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார். அந்த வகையில் 'GOAT' படத்தில் 2 பாடல்களை பாடியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய் தான் நடித்த படங்களில் பாடியுள்ள பாடல்கள் விவரம்:-

ரசிகன் படத்தில் 'பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வித்தாப்பாரு செவத்த குட்டி'

தேவா படத்தில் 'கோத்தகிரி குப்பம்மா... கோவப்பட்டா தப்பம்மா...'

காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தில் 'அஞ்சா நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே...'

காதலுக்கு மரியாதை படத்தில் 'விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே.. இரவு பகலாக; இதயம் கிளியாகிப் பறந்ததே...'

பிரியமுடன் படத்தில் 'மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நான் ஒட்டிக்கனும் மேல'

நிலாவே வா படத்தில் 'நிலவே நிலவே, நிலவே நிலவே நில்லு நில்லு திறவாய் மொழிகள் சொல்லு'

பத்ரி படத்தில் 'என்னோட லைலா வராளே மெயிலா சிக்னலே கெடைக்கல கெடைக்கல'

உள்ளத்தை கிள்ளாதே படத்தில் 'உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே....'

துப்பாக்கி படத்தில் 'கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்துல...'

தலைவா படத்தில் 'வாங்கனா வணக்கங்கனா... மை சாங்க நீ கேளுங்கண்ணா நா...'

ஜில்லா படத்தில் 'கண்டாங்கி... கண்டாங்கி...கட்டி வந்த பொண்ணு...'

கத்தி படத்தில் 'செல்பி புள்ள... செல்ஃபி புள்ள...'

தெறி படத்தில் 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு செல்லா குட்டியே...'

பைரவா படத்தில் 'பாப்பா... பாப்பா... பப்பரப்பா...'

பிகில் படத்தில் 'நெஞ்சுக்குள்ள குடி இருக்கும் நம்ம சனம் வெறித்தனம்

மாஸ்டர் படத்தில் 'குட்டி ஸ்டோரி...'

பீஸ்ட் படத்தில் 'ஜாலியோ ஜிம்கானா...'

பிரியமானவளே, புலி போன்ற படங்களில் தனது குரலில் பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதேபோல் 'GOAT' படத்திலும் விஜய் பாடியுள்ள பாடல்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து உள்ளனர்.

Tags:    

Similar News