லியோ படத்தில் திரிஷா செத்திடுவாங்களா? கூலாக பதில் அளித்த லோகேஷ்
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். அங்கு மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "வாய்ப்பு கிடைக்கும் போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன். 'லியோ திரைப்படம் எல்.சி.யூ (LCU)-வா என்று தெரிவதற்கு மூன்று மாதங்கள் உள்ளது. அதை இப்போதே சொல்லிவிட்டால் பின்னர் சொல்லுவதற்கு எதுவும் இருக்காது. 'லியோ' திரைப்படம் கைதி மாதிரியான திரைப்படம்" என்று கூறினார். மேலும், மாணவர்கள் உங்கள் படத்தில் கதாநாயகிகள் இறந்துவிடுவார்கள் திரிஷாவிற்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு லோகேஷ் எதுவும் ஆகாது என்று பேசினார்.