சினிமா செய்திகள்
null

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் ஆளவந்தான்

Published On 2023-12-09 07:10 GMT   |   Update On 2023-12-09 07:18 GMT
  • கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'.
  • இப்படம் நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. இந்த படத்திற்கு கமல்ஹாசன் தான் திரைக்கதை எழுதினார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இந்த படம் உருவான காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. எனினும், இந்த படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை.


இதைத்தொடர்ந்து 22 வருடங்களுக்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் உருவாக்கப்பட்டு நேற்று உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் முதல் காட்சியில் கமல்ஹாசன் எண்ட்ரியின் போது ரசிகர்கள் கற்பூரம் காண்பித்து உற்சாகமாக கொண்டாடினர். இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News