சினிமா செய்திகள்

கமல்ஹாசன்

சின்ன இருமல் என்றால் கூட பெரிய செய்திகள் வருகிறது - நடிகர் கமல்ஹாசன்

Update: 2022-11-26 10:35 GMT
  • நடிகர் கமல்ஹாசன் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
  • இவர் விஜய் சேதுபதி 'டிஎஸ்பி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். சமீபத்தில் ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, சென்னை திரும்பினார்.


கமல்ஹாசன்

இதைத்தொடர்ந்து அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.


கமல்ஹாசன்

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவரிடம் உடல்நலம் குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு கமல் கூறியதாவது, "முன்பு பெரிய விபத்து எல்லாம் நேர்ந்தபோதுகூட அடுத்தப் படத்தின் ஷுட்டிங் எப்போது என்று என்னிடம் கேட்பார்கள். இப்போது சின்ன இருமல் என்றால்கூட என்னைப் பற்றி பெரிய செய்திகள் எல்லாம் வருகிறது. அதற்கு காரணம், ஒன்று ஊடகம், பெருகிவரும் அன்பு என்று நான் நம்புகிறேன். நான் நன்றாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News