சினிமா செய்திகள்
null

48 மணி நேரத்தில் சூர்யாவின் `ரெட்ரோ' செய்த சம்பவம்

Published On 2025-04-29 11:22 IST   |   Update On 2025-04-29 15:57:00 IST
  • கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
  • ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவு பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்ச டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதல் நாள் வசூல் மட்டும் 13 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

48 மணிநேரத்தில் வேறு எந்த பெரிய தமிழ் நடிகர்களுக்கும் இவ்வளவு முன்பதிவுகள் நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News