சினிமா செய்திகள்
null

பர்த்டே பார்ட்டியில் போதைப்பொருள் - பிரபல தெலுங்கு பாடகி விளக்கம்

Published On 2025-06-12 10:46 IST   |   Update On 2025-06-12 10:48:00 IST
  • பாடகி மங்லி தனது பிறந்தநாளை பிரபல ரிசார்ட்டில் கொண்டாடினார்.
  • பிறந்தநாள் நிகழ்ச்சியில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

தெலுங்கு திரை உலகில் பிரபல பாடகியாக இருக்கும் மங்லி மிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களையும் இவர் பாடி இருக்கிறார்.

இந்நிலையில் மங்லி தனது பிறந்தநாளை பிரபல ரிசார்ட்டில் கொண்டாடினார். அந்த விழாவில் அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் விருந்தினராக கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்திய போது ஏராளமான கஞ்சா, வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்த்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பாடகி மங்லி போதைப் பொருள் பயன்படுத்தினாரா? இல்லையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,

இந்த சம்பவம் தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாடகி மங்லி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வீடியோவில், என்னுடைய பர்த்டே பார்ட்டில போதைப்பொருள், வெளிநாட்டு மதுபானங்கள் பயன்படுத்தப்படவில்லை" என்று பாடகி மங்லி விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News