சினிமா செய்திகள்

ஆஸ்கர் அகாடமியில் இணைந்த கமல்ஹாசனுக்கு பவன் கல்யாண் வாழ்த்து

Published On 2025-06-29 12:39 IST   |   Update On 2025-06-29 12:39:00 IST
  • ஆஸ்கர் விருதுக்கான குழுவில் கமல் தேர்வு செய்யப்பட்டது இந்திய திரையுலகிற்கே பெருமையான தருணம்
  • கமல்ஹாசன் இந்திய மற்றும் உலக சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

திரைத்துறையின் உச்சபட்ச அமைப்பாக ஆஸ்கர் அகாடமிக்கு புதிய உறுப்பினர்களாக இணைய நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுவதும் 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் அகாடமியில் வாக்களிக்கும் உறுப்பினராக சேரவுள்ளது குறித்து பதிவிட்ட கமல்ஹாசன், "இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கானது. என்னை செதுக்கிய எண்ணிலடங்கா கதைசொல்லிகளுக்கானது. இந்திய சினிமா இவ்வுலகிற்கு நிறைய வழங்க உள்ளது" என்று தெரிவித்தார்.

ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக இணையவுள்ள கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், கமல்ஹாசனுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், ஆஸ்கர் விருதுக்கான குழுவில் கமல் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய திரையுலகிற்கே பெருமையான தருணம்.

சினிமாவின் ஒவ்வொரு அங்கத்திலும் அவர் செலுத்திய ஆதிக்கம், பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. அவர் உண்மையிலேயே கலையின் வித்தகர். மேலும் பல ஆண்டுகள் உலக சினிமாவுக்கு அவர் சேவையாற்ற மனதார வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News