சினிமா செய்திகள்

சர்ச்சைகளுக்கு மத்தியில் டெல்லியில் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா

Published On 2024-11-18 12:29 IST   |   Update On 2024-11-18 12:29:00 IST
  • நயன்தாரா இன்று பிறந்தநாளை டெல்லியில் குடும்பத்துடன் கொண்டாடினார்.
  • பொதுமக்களிடம் ஆர்வமுடன் கை குலுக்கி பேசி மகிழ்ந்தார்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நயன்தாரா. விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நயன்தாராவுக்கு இன்று 40-வது பிறந்தநாள். அவரது பிறந்த நாளையொட்டி நயன்தாராவின் சினிமா வாழ்க்கை மற்றும் காதல் திருமணத் தொகுப்புகள் ஆவணப்படமாக நெட்பி ளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகி இருக்கிறது.


முன்னதாக படம் பற்றி சில தினங்களுக்கு முன்பு வெளியான 3 நிமிட புரோமோவில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் எனது அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு நஷ்டஈடாக ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தனுஷ் தனக்கு நோட்டீஸ் அனுபியதாக நயன்தாரா நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. சர்ச்சைகளுக்கு மத்தியில் நயன்தாரா இன்று தனது பிறந்த நாளை டெல்லியில் குடும்பத்துடன் கொண்டாடினார்.

முன்னதாக நேற்று மாலை டெல்லியில் உள்ள பிரபல சுற்றுலா தலமான 'குதுப்மினாரை' கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் சுற்றிப்பார்த்தார்.


நயன்தாராவை கண்டதும் ஏராளமான பொதுமக்கள் உற்சாகம் அடைந்து அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

நயன்தாராவும் பொதுமக்களிடம் ஆர்வமுடன் கை குலுக்கி பேசி மகிழ்ந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News