அதர்வா நடித்த தணல் படத்தின் திரைவிமர்சனம்!
கதைக்களம்
ஊதாரித்தனமாக சுற்றி திரியும் இளைஞனாக நாயகன் அதர்வா இருக்கிறார்.சில வருடங்களுக்கு பிறகு போலீஸ் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர செல்கிறார். தனது அப்பாயிண்ட்ன்மெண்ட் ஆர்டரை பெற்று பணியில் சேர, அவருடன் சேர்ந்து ஐந்து பேரும் பணியில் சேர வருகின்றனர்.
காலை முதல் மாலை வரை போலீஸ் நிலையத்தில் இவர்கள் ஆறு பேரும் காத்திருக்கின்றனர். கடைசியாக, போலீஸ் அதிகாரி ஒருவர், ஆறு பேரையும் ரவுண்ட்ஸ் போகுமாறு சொல்கிறார். அப்போது கையில் தொலைப்பேசி என எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இவர்கள் ஆறு பேறும் நடந்தே ரவுண்ட்ஸ் செல்கின்றனர். அப்போது, பாதாள சாக்கடை மூடியினைத் திறந்து ஒருவர், இவர்களைக் கண்டதும் தலைதெறிக்க ஓடுகிறார்.
அவரை சந்தேகப்படும் அதர்வா உட்பட ஆறு போலீஸும், அவரை துரத்திக் கொண்டுச் செல்கின்றனர். ஒருக்கட்டத்தில் அவர் ஒரு பெரிய சுவரை தாண்டி ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு சென்று விடுகிறார். மேலும் அங்கு இருந்து மறைந்து விடுகிறார்.
எது வாசல் எது முடிவு என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர் ஆறு பேரும்.
அப்போது, அங்கு அஸ்வின் உட்பட மூன்று பேர் நிற்க, அவர் யார் என்று விசாரிக்க அருகில் செல்கிறார் போலீஸ் தரணி. பேசிக் கொண்டிருக்கும் போதே அஸ்வின் தன் கையில் மறைத்து வைத்திருந்த மிகப்பெரும் கத்தியை எடுத்து தரணியின் தலையை துண்டித்து கொன்று விடுகிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியாகிறார் அதர்வா. போலீஸ் ஐந்து பேரையும் சுற்றுப் போடுகிறது ஒரு கும்பல்.
இந்த கும்பலின் நோக்கம் தான் என்ன.? எதற்காக இந்த கொலை வெறி தாக்குதலை நடத்த வேண்டும்.? இந்த கும்பலுக்கும் அதர்வாவிற்கும் என்ன தொடர்பு? எந்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகன் அதர்வா, தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அளவாக நடித்துள்ளார். காதல் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்.வில்லன் என்று சொல்வதை விட மற்றொரு நாயகன் என்று தான் சொல்ல வேண்டும் அஸ்வினை அவர் வரும் காட்சியில் எல்லாம் பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளார்.நாயகி லாவண்யா தனது அழகால் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார்.
இயக்கம்
ஒரு கிரைம் திரில்லர் திரைப்படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ரவீந்திர மாதவா. கதை கொண்டு சென்ற விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார்.சில லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
சண்டை காட்சிகளில் கச்சிதமாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன்
இசை
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
தயாரிப்பு
அன்னை பிலிம் ப்ரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங் - 2.5/5