சினிமா செய்திகள்
சின்னத்திரையில் நடிக்க வைப்பதாக கூறி சிறுமிக்கு அத்துமீறல்: கேரள நடிகை கைது
- கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகையை திருமங்கலம் அழைத்து வந்து விசாரிக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- நடிகை மினு கேரளாவில் இருந்து சென்னை அழைத்து வரப்படுகிறார்.
14 வயது சிறுமியை சின்னத்திரையில் நடிக்க வைப்பதாக கூறி 4 பேர் அத்து மீறியுள்ளனர். இது தொடர்பாக அந்த சிறுமி புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கேரள நடிகை மினு முனீரை சென்னை போலீசார் கேரளாவில் கைது செய்தனர்.
கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகையை திருமங்கலம் அழைத்து வந்து விசாரிக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி தற்போது நடிகை மினு கேரளாவில் இருந்து சென்னை அழைத்து வரப்படுகிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடம் சென்னை என்பதால் வழக்கு சென்னை திருமங்கலம் போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.