போர் பதற்றத்தினால் விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு
- இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
- ‘கிங்டம்’ படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக 'கிங்டம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 30-ந்தேதிவெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 'கிங்டம்' படம் வரும் 30-ந்தேதிக்கு பதிலாக ஜூலை 4-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், படத்திற்கான ப்ரொமோஷன், கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக படக்குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.