சினிமா செய்திகள்

'கூலி' படத்தின் கதை இதுதானா? - இணையத்தில் வைரலாகும் தகவல்

Published On 2025-07-17 09:16 IST   |   Update On 2025-07-17 09:16:00 IST
  • பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
  • உலகம் முழுவதும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) படம் திரைக்கு வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம், 'கூலி'. நாகார்ஜூனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சுருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

உலகம் முழுவதும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) படம் திரைக்கு வருகிறது.

இதற்கிடையில் 'கூலி' படத்தின் கதை என்று இணையத்தில் ஒரு தகவல் உலா வந்துகொண்டிருக்கிறது. அதன்படி, பெரிய 'கேங்ஸ்டர்' ஆன ரஜினிகாந்த், தான் செய்த தவறுகளை சரிசெய்ய முயற்சிக்கிறார். அதற்காக தனது எதிரிகளை பழிவாங்கிவிட்டு, பின்னர் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்.

இப்படி ஒரு தகவல் இணையத்தில் வைரலாகிறது. இது நேற்று திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags:    

Similar News