சினிமா செய்திகள்

எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு! - ARR-க்கு நன்றி பாராட்டிய GVP

Published On 2025-10-01 12:06 IST   |   Update On 2025-10-01 12:06:00 IST
  • 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது இரண்டாவது தேசிய விருதை பெற்றுள்ளார்.
  • ‘சூரரைப் போற்று’ படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார்.

டெல்லியில் கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது பெற்றார்.

'வாத்தி' படத்தில் பாடல்கள் அமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது இரண்டாவது தேசிய விருதை பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு 'சூரரைப் போற்று' படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக தேசிய விருதை பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பரிசு ஒன்றை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு. இரண்டாவது முறையாக தேசிய விருதுகளைப் பெற்றதற்காக ஏ.ஆர்.ரகுமான் சார் இந்த அழகான வெள்ளை கிராண்ட் பியானோவை எனக்குப் பரிசளித்தார்.

மிக்க நன்றி சார், இது நிறைய அர்த்தம் தருகிறது. லெஜெண்ட் பயன்படுத்திய பியானோ. இதைவிட சிறந்த பரிசு என்னவென்று நான் கேட்க முடியும் என்று கூறியுள்ளார்.


Tags:    

Similar News