OTT

`டெஸ்ட்' முதல் `கர்மா' வரை - இந்த வார ஓடிடி ரிலீஸ்

Published On 2025-04-03 21:53 IST   |   Update On 2025-04-04 18:52:00 IST
  • TEST படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
  • ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

டெஸ்ட்

விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

இந்தத் திரைப்படம் வருகிற நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.

Full View

மர்மர்

ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் Found footage ஹாரர் திரைப்படமாகும். Found footage ஹாரர் திரைப்படங்கள் என்றால் திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெகார்டர், சிசிடிவி கேமரா ஃபூட்டஜ் போலயே காட்சி படுத்திருப்பர்.

இதன் மூலம் உண்மையாகவவே அந்த அமானுஷ்ய சம்பவ உணர்வை அது பார்வையாளர்களுக்கு கடத்தும். திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

Full View

லெக் பீஸ்

நகைச்சுவை நடிகரான ஸ்ரீனாத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது லெக் பீஸ் திரைப்படம். இப்படம் 5 ஆண்களை சுற்றி நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. படத்தில் யோகி பாபு, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி மற்றும் ரமேஷ் திலக் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லெக் பீஸ் படம் நாளை டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

Full View

கர்மா

4 வித்தியாசமான கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது கொரியன் திரைப்படமான கர்மா. வெவ்வேறு சூழ்நிலை மற்றும் மனநிலையில் உள்ள மனிதர்கள் ஒரு சூழ்நிலையால் ஒன்று சேர்கிறார்கள்/ இதை மையப்படுத்தியே இக்கதை உருவாகியுள்ளது. இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிதி தளத்தில் வெளியாகிறது.

Full View

ராஜாகிளி

சமீபத்தில் சமூத்திரகனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்த திரைப்படம் ராஜாகிளி. இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், பழ.கருப்பையா, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், தீபா, பாடகர் கிரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் ராஜாகிளி திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Full View

Tags:    

Similar News