சினிமா செய்திகள்

பிரித்விராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

Published On 2025-09-23 12:12 IST   |   Update On 2025-09-23 12:12:00 IST
  • சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
  • இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.

கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொகுசு கார்களை பூட்டன் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி கொண்டுவரப்பட்டதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனால் இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.

கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து எம்புரான் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பிரித்விராஜுக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News