சினிமா செய்திகள்

முதல் படத்தின் சம்பளத்தை வைத்து பள்ளிக்கூடம் கட்டும் கும்பமேளா அழகி

Published On 2026-02-12 15:02 IST   |   Update On 2026-02-12 15:02:00 IST
  • என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன்.
  • என் சொந்த ஊரில் பெண்களுக்கான பள்ளியை கட்ட முடிவு செய்திருக்கிறேன்.

மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர் மோனலிசா. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார். இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்று அவரது வாழ்க்கை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

தற்போது ஒரு இந்தி மற்றும் 2 தெலுங்கு படங்களில் நடித்து வரும் மோனலிசா அளித்துள்ள பேட்டியில், 'கும்பமேளா மூலம் என் வாழ்க்கை நல்லபடியாக மாறி நான் இந்த நிலைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. திடீரென்று கிடைத்த புகழ் மூலம் எனக்கு பொறுப்பும் வந்திருக்கிறது. என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன். என் சொந்த ஊரில் பெண்களுக்கான பள்ளியை கட்ட முடிவு செய்திருக்கிறேன்.

என் முதல் படத்தின் சம்பளத்தை வைத்து அந்த பள்ளியை கட்டப் போகிறேன். கல்வி மூலம் தான் நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். அதனால் எனக்கு கிடைக்கும் சம்பளத்தை கல்விக்கு செலவு செய்யப்போகிறேன்' என்றார்.

மோனலிசாவின் முடிவு வைரலாகி வரும் நிலையில் திடீரென பணம் கிடைத்ததும் ஆடம்பரத்துக்கு ஆசைப்படாமல் பள்ளிக்கூடம் கட்ட நினைப்பது பெருமைக்குரிய விஷயம் என்று வாழ்த்தியுள்ளனர்.

Tags:    

Similar News