கிறிஸ்டினா கதிர்வேலன்- திரைவிமர்சனம்
கும்பகோணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இளைஞர் கவுஷிக். பள்ளி முடித்த நிலையில், துபாயில் வேலைக்கு செல்ல முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் கதாநாயகி பிரதிபாவை சந்திக்கிறார். அவள் மீது காதல் வயப்படுகிறார். இதனால், துபாய் திட்டத்தை கைவிடும் கவுஷிக், பிரதிபா படிக்கும் கல்லூரியிலேயே சேர்கிறார்.
இவ்வாறு சென்றுக் கொண்டிருக்கையில், கவுஷிக் மற்றும் பிரதிபா தனது நண்பர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். அப்போது, நண்பர்களுக்கு சாட்சி கையெழுத்துபோட தங்களது ஆவணங்களையும் சமர்ப்பிக்கின்றனர். நண்பர்களின் காதலுக்கு உதவி சென்ற இடத்தில் இவர்களுக்கு விபரீதம் ஏற்படுகிறது.
இதனால், வரும் சிக்கல்களை கதாநாயகன் எப்படி சமாளித்து மீண்டு வருகிறார்? காதலே வேண்டாம் என்று இருக்கும் கதாநாயகியை கரம் பிடிக்கிறாரா ? என்பது மீதிக்கதை..
நடிகர்கள்
ஒரு கிராமத்து இளைஞராக கவுஷிக் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் படம் என்றாலும் இயல்பாக நடித்திருக்கிறார். பிரதிபா கதாபாத்திரத்தை ஆழமாகப் புரிந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
இயக்கம்
கதையின் ஆரம்பத்தில் இது ஒரு சராசரி காதல் படமாக இருக்கும் என்று நினைத்த நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன். இரண்டாம் பாதியில் படம் சுவாரஸ்யமாகவும், கிளைமேக்ஸில் செண்டிமென்டாகவும் படத்தை நிறைவு செய்துள்ளார். ஒரு சில குறைகள் இருந்தாலும் படத்தின் வேகம் சீராக செல்கிறது.
இசை
பாடல்கள் சுமார் என்றாலும், படத்திற்கு சிறந்த பின்னணி இசையால் பலம் சேர்த்துள்ளார்.
ஒளிப்பதிவு
கிராமப்புற காட்சிகளை பசுமையா பதிவு செய்துள்ளார் பிரகத் முனிசாமி.