சினிமா செய்திகள்

'மாரீசன்' திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

Published On 2025-07-16 21:37 IST   |   Update On 2025-07-16 21:37:00 IST
  • சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
  • மாரீசன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.

இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் முதல் பாடலான ஃபாஃபா பாடல், டிரெய்லருக்கும் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 'மாரீசன்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News