சிம்பு - வெற்றிமாறன் காம்போ... 'அரசன்' படப்பிடிப்புத் தள புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
- 'அரசன்' படம் தொடர்பாக வெளியான புரோமோ வீடியோ வரவேற்பை பெற்றது.
- அரசன் படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகவுள்ளது
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகவுள்ளது
இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது.
சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், 'அரசன்' படம் தொடர்பாக வெளியான புரோமோ வீடியோ வரவேற்பை பெற்றது.
'அரசன்' படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. இந்நிலையில், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றனர்.