சினிமா செய்திகள்

அரண்மனை 4 - 'அச்சச்சோ' பாடல் வெளியானது

Published On 2024-04-14 07:48 GMT   |   Update On 2024-04-14 07:48 GMT
  • அரண்மனை திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
  • , 'அரண்மனை 4 ' படத்தின்' அச்சச்சோ' என்ற ப்ரோமோ பாடல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகியது.

தமிழ் சினிமாவில் பேய் திரைப்படம் என்றால் நமக்கு நியாபகம் வருவது அரண்மனை தான். சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை பாகம் 1- 2014 ஆம் ஆண்டிலும் , பாகம் 2 - 2016 ஆம் ஆண்டில் வெளியாகியது.

பிறகு 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரையிலர் வெளியானது. இதுவரை அரண்மனை 4 படத்தின் டிரெயிலர் 1 கோடி பார்வைகள் யூடியூபில் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் , 'அரண்மனை 4 ' படத்தின்' அச்சச்சோ' என்ற ப்ரோமோ பாடல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகியது. பாடலில் தமன்னாவும் ராஷி கண்ணாவும் மிக கவர்ச்சியான உடையில் நடனமாடி இருக்கின்றனர். அரண்மனை4 படத்தின் சில காட்சிகளும் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

அரண்மனை திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்களிடையே தற்பொழுது இந்த பாடல் மிக வைரலாக பரவி வருகிறது.

Full View

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News